பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்க உள்ளார். விஜயின் சந்திப்புக்காக போராட்டக்குழு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஒரு மண்டபத்தில் சந்திப்பை நிகழ்த்த காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தவெக, போராட்டக்குழுவினர் ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் சந்திப்பை நிகழ்த்த அனுபதி கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தகவல் எதுவும் உறுதியாகததால், தொண்டர்கள் இடையே குழப்பம் நீடித்து வருகிறது.