விஜய் pt
தமிழ்நாடு

HASHTAG போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்... வெளுத்து வாங்கிய விஜய்!

”திடீரென அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் இருக்கும்தானே. எப்படி முடிக்கலாம் என சிலருக்கு குழப்பம் வரும். தம்முடைய பொய்கள் உடைந்துபோகும் என்று அஞ்சுகிறார்கள். ” - விஜய்

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை அருகே மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய விஜய்,

” நெஞ்சில் குடியிருக்கும் தோழர், தோழிகளுக்கு வனக்கம். அரசியல் என்றாலே வேற லெவல்தான். அரசியலைக் கணிக்கவே முடியாது. 1967,1977 தேர்தல்கள் போன்று அமையப்போகிறது 2026 தேர்தல். 2026 இல் வரலாறு படைக்கும் தவெக.

திடீரென அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் இருக்கும்தானே. எப்படி முடிக்கலாம் என சிலருக்கு குழப்பம் வரும். தம்முடைய பொய்கள் உடைந்துபோகும் என்று அஞ்சுகிறார்கள். தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்புகளை லெஃபட் ஹேண்டில் டீல் செய்து தற்போது இரண்டாம் ஆண்டில் விழா காண்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளோம்.

இந்தநேரத்தில் நம்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தவெக மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம்..ஏன் இருந்தால் என்ன?

அண்ணா , எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது பின்னால் இருந்தது இளைஞர்கள்தான். இதனால்தான், 1967, 77 மிகப்பெரிய ஒரு வெற்றிக்கிடைத்தது. அதுதான் வரலாறு.

மற்றொரு புகார்.. கட்சி நிர்வாகிகள் எல்லாம் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாம்... ஏன் வரக்கூடாதா?... நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி. சாதாரண மக்கள் பலவற்றை சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

நமது கட்சி பண்ணையாளர்களுக்கான கட்சி கிடையாதே.. அப்பொழுது பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள்.. ஆனால், இப்போது, பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையாளர்களாக மாறிவிட்டார்கள். வளர்ச்சி போன்ற எதையும் கவலைப்படாமல் பணம் பணம் பணம் என்று இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலைக்கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு வெளியேற்றுவதுதான் நமது முதல் வேலை; அதற்குதான் 2026 தேர்தலை சந்திக்கபோகிறோம்.

விரைவில் பூத் கமிட்டு மாநாடு என்று ஒன்றை நடத்தப்போகிறோம். அன்று தெரியும் தவெக எந்த பெரிய கட்சிக்கும் சலித்தது கிடையாது என்று. முதல்சக்தியால், முதன்மையான சக்தியாக தமிழக வெற்றிக்கழகம் இருக்கும்.

மும்மொழிக்கொள்கை எனும் புதிய பிரச்னை. எல்லா மொழிகளையும் நாம் மதிப்போம்; அதில் மாற்றுக்கருத்தே இல்லை, இங்கே தனிப்பட்ட முறையில் எந்த மொழியை வேண்டுமேனாலும் யார் வேண்டுமானாலும் தேவைப்பட்டால் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சிக்கு உரிமைக்கு எதிராக, ஒரு மாநில அரசின் மொழிக்கொள்கையை கல்விக்கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறொரு மொழியை வலுக்கட்டாயமாக அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்... எப்படி Bro? தவெக சார்பில் அதை நாமும் அதை எதிர்ப்போம். பாசிசமும் பாயாசமும் அடித்துக்கொள்வதுபோல் நடிக்கிறார்கள்.

இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம பாசிசமும் பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்வார்களாம். இதை நாம் நம்பவேண்டுமாம். ‘வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ’“ என்று தெரிவித்துள்ளார்.