தமிழ்நாடு

"விஜய் அரசியலுக்கு வர வேண்டும்"- தேனியில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

"விஜய் அரசியலுக்கு வர வேண்டும்"- தேனியில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

kaleelrahman

யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என தேனியில் நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


தேனியில் சமீபகாலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு பிறப்பையொட்டி தேனி நகரில் நடிகர் விஜய் ரசிகர்கள், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மறுத்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், "யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். நாங்கள் யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பித்தான். 2021 புதிய கட்சி துவங்க வேண்டும்." எனக் கூறியுள்ளனர்.


"ஒரு சில இடங்களில், நீங்கள் சினிமாவில் இருந்தால் ரசிகனாக இருப்போம். அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருப்போம். எதுவும் இல்லையென்றால் உங்கள் தம்பிகளாக இருப்போம். என்றும் நாங்கள் உங்களுடன்" என்ற வாசகங்களுடன் தேனி நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.