சீமான், இபிஎஸ், விஜய் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு.. ‘நோ’ சொன்ன TVK, சீமான்!

அதிமுக, பாஜக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி மறைமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அழைப்புவிடுத்திருந்த நிலையில், அதனை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது. மேலும், மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய வரலாறு படைக்கும் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதேநேரம் சேலத்தில் நடந்த தவெக கொள்கை விளக்கக் கூட்டத்தில், தவெக தனித்துப் போட்டியிடும் என முடிவு எடுக்கப்பட்டது.

சீமான், இபிஎஸ், விஜய்

மறுபுறம், பழனிசாமியின் அழைப்புக்கு பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்ததுடன், தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும் எனவும் வினவியுள்ளார். இதற்கு முன்னதாககூட கூட்டணிக்கு வருமாறு பழனிசாமி விடுத்திருந்த அழைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகள் ஆகிய கட்சிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது மீண்டும் கூட்டணிக்காக பழனிசாமி திறந்துவைத்துள்ள கதவை நோக்கி விஜய், சீமான் செல்லப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.