தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கம் வெற்றியை பதிவு செய்த இடங்களின் லிஸ்ட்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கலிலுல்லா

விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் தங்கள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகேஸ்வரி என்பவர் போட்டியிட்டார். மதுரையில் ஒரே ஒரு வார்டில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த வார்டில் அதிமுக வேட்பாளர் பிரேமா வெற்றி பெற்றுள்ளார்.

பொன்னேரி நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக 16-வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா S.கொடிக்குளம் பேரூராட்சி 5 வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிகளை திமுக கைப்பற்றியது. குமாரபாளையம் நகராட்சியில் 9 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இழுபறி நீடித்து வருகிறது. அதில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார். கோட்டக்குப்பம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.