தமிழ்நாடு முழுவதும் சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வரும் நிலையில், அத்திட்டம் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் தான், வெற்றிப் பயணத்திட்டம் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்தச்சூழலில் தான், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், தற்போது முதல்வர் விஜய் வெற்றிப் பயணம் திட்டத்தை, பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசப் பயணச்சீட்டு வழங்கி தொடங்கி வைத்திருக்கிறார்.
முன்னதாக, வெற்றிப் பயணம்' திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர நகர்ப்பகுதிகளில் இயங்கும் Express, Lss, டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரணப்பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கிமீக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக 12,602 பேருத்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பொத்த 18413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 17,882 பெருத்துகள் (60 விழுக்காடு) மொத்த 194,643 நடைகளில் (Sieges) 165,312 நடைகள் 155 விழுக்காடு) இயக்கப்படும் நானொன்றுக்கு சுமார் 84:32 இலட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் பரப்புரைக்காக மதுராந்தகம் தொகுதிக்கு செல்லும் முதல்வர் அங்கு சாலை வலம் மேற்கொள்ளவிருக்கிறார்.