தமிழ்நாடு

நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

webteam

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 26-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ரஷ்யா- உக்ரைன் போர்... ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு சரியா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது ... Atleast ind should condemn Russia's action ... பாவம் செலன்ஸ்கி தனியா போராடிட்டு இருக்கார்

சரி, ஏனென்றால் ராஜாங்க ரீதியாக ரஷ்யா நம்முடன் நீண்ட கால நல்லுறவை பேணி வருகிறது. மேலும் அணு உலைகளை நிர்மாணித்து இந்தியக் கட்டமைப்பு வலிமை பெற துணை நிற்கிறது. உக்ரைன் நட்பு நாடு ஆனால் உக்ரைனின் அரசியல் ஆதாய கணக்குகளுக்கு நாம் செவி சாய்க்க வேண்டியது இல்லை.

உலகில் இதுபோன்ற இக்கட்டான சூழல் உருவாகும்போது, நமது திறன்பட்ட ஆளுமையை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பமாக அதை பயன்படுத்தியிருக்க வேண்டும்! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடுநிலை வகித்த நமது நிலைப்பாடு சரியானதல்ல! கலிங்கம் கண்ட அசோக சக்கரவர்த்தியின் வழிவந்த சான்றோர்கள் நாம் என்பதை மறக்கலாமா?

சர்வதேச அரசியல் புரியவில்லை... ஆனால் போர் எக்காரணத்தாலும் வேண்டாம்..
சர்வ வல்லமை படைத்த நாடுகள் சிறிய நாடுகளை அபகரிக்க நடத்தப்படும் இந்தப் போர்கள் மனிதநேய அடிப்படையில் நிறுத்தப்படவேண்டும், நீங்கள் கைப்பற்றட நினைக்கும் நாடுகளில் உயிரிழப்புகளும் அகதிகளும் தொடர்கதையாகி விட்டது,
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மக்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், இராணுவ வீரர்களின் தியாக வாழ்கையும் தவிர போர் முறை அல்ல..
போர் என்பது இயற்கைப் பேரிடர்களை விட ஆபத்தானது, இது மனித இனமே மனிதத்துவத்தை அழிக்கும் ஓர் பயங்கரமான சர்வாதிகாரப்போக்கு.
இது நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமற்ற ஒன்று.
ஐநாவில் இந்தியாவின் நிலைபாடு சரியானது தான்......... அணு ஆயுதங்கள் ஒத்திகை கூடாது என அமெரிக்க இந்தியாவை கூறிய போது ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு உதவி புரிந்தது..... அவ்வாறு இருக்க இந்தியாவால் ரஷ்யாக்கு எதிராக தனது நிலைபாட்டை தெரிவிக்க இயலாது...அதே சமயம் உக்ரைநுக்கு எதிராகவும் நிற்பது மனித நேயம் அற்ற செயல்... ஆதலால் இந்தியா சரியான முறையில் தான் இருக்கிறது...... அமெரிக்க இப்பொழுது மைண்ட் game ஆடுது... இதற்கு உக்ரைன் இரையகிறது...