தமிழ்நாடு

காணும் பொங்கல்: ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய செஞ்சிக் கோட்டை

kaleelrahman

காணும் பொங்கல் ஒட்டி உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை, பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

உலகம் முழுவதும் தை 1-ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக காணும் பொங்கல் கலையிழந்து காணப்படுகிறது.

இதனால் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்து காணும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக செஞ்சிக் கோட்டை மூடப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.