தமிழ்நாடு

'மக்களை தேடி மருத்துவம்'.. ’பொதுவாக என்மனசு தங்கம்’ பாடலின் மெட்டில் வைரலாகும் வீடியோ!

webteam

மக்களை தேடி மருத்துவம் குறித்து சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், பாடி நடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டை நிறைவு செய்யும் தமிழகம் முழுவதும் அத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற திரைப்பட பாடல் வரிகளை மாற்றி,  பொது சுகாதார துறையின் தேவைகளையும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பற்றியும் வட்டார சுகாதார பார்வையாளர் செல்வன் பாடல் பாடி நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.