தமிழ்நாடு

சில்லறை கேட்டு முதியவரை தாக்கும் நடத்துனர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சில்லறை கேட்டு முதியவரை தாக்கும் நடத்துனர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

kaleelrahman

அரசு பேருந்தில் பயணித்த முதியவரிடம் சில்லறை கேட்டு தகராறு செய்யும் நடத்துநர் அவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கவுந்தப்பாடி வழியாக ஈரோடு நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தின் நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி வந்தார். அப்போது பேருந்தில் பயணித்த முதியவரிடம் டிக்கெட்டுக்கு நடத்துனர் சில்லரை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நடத்துனர், காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா என தகாத வார்த்தையில் பேசி முதியவரை தாக்குகிறார்.

அப்போது முதியவர் நான் குடிக்கவில்லை என வாதம் செய்கிறார். பேருந்தில் இருந்த சக பயணிகள் முதியவரை தாக்கிய நடத்துனரை கண்டிக்கின்றனர். முதியவர் தன்னை சைகையில் திட்டியதால் தாக்கியதாக நியாபப்படுத்தினார். நடத்துனருக்கும், முதியவருக்கும் இடையே நடந்த கைகலப்பை சக பயணி ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது சம்பவம் குறித்து விசாரணை செய்து நடத்துனர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.