சென்னை - கிழக்கு கடற்கரை முகநூல்
தமிழ்நாடு

36 பேர் சுமார் 3 மணி நேரம்... அந்தரத்தில் தவித்த மக்கள்.. பூங்காவில் நடந்தது என்ன?

சென்னை - கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை அருகே பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்டினத்தில் பழுது ஏற்பட்டதால், கீழே இறங்க முடியாமல் 36 பேர் சுமார் 3 மணி நேரம் அந்தரத்தில் தவித்தனர். என்ன நடந்தது எப்படி மீட்கப்பட்டனர்? பார்க்கலாம்.

சென்னை - கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் சுமார் 36 பேர் டாப்கான் என்ற ராட்டினத்தில் நேற்று (27.5.2025) மாலை 6.15 ரைடு சென்றுள்ளனர். அப்போது ராட்டினத்தை இயக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சுமார் 50 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்றது. இதனால் அதில் இருந்தவர்கள் பதற்றத்தில் அலற ஆரம்பித்தனர்.

முதலில் ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்க விஜிபி பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் . கிரேன் இயந்திரம் மூலம் முயன்றது. இருப்பினும், உயரம் போதாத காரணத்தால் அது கைவிடப்பட்டது.

மேலே சிக்கியவர்கள் சமூக வலைதளத்தில் தங்களின் நிலைமையை பதிவிட்டனர். இந்நிலையில், தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ராட்டினத்தில் சிக்கியவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் கொடுத்து பின்னர், ஸ்கை லிஃப்டை பயன்படுத்தி பின்னர் பத்திரமாக மீட்டனர்.

முதற்கட்டமாக ராட்டினத்தில் சிக்கியுள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டனர். முதலில் 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ராட்டினத்தில் சிக்கியவர்களை சுமார் 3 மணி நேரம் அப்படியே இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தங்களை மீட்பதில் பூங்கா நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக ராட்டினத்தில் சிக்கியவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், கோடைக்காலம் என்பதால் உரிய சோதனைமேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.