பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை, நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிகாட்டும் விதமாக, வந்தவாசியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் திரளான மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண்களை பெறவும் ஆலோசனை தரும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் வெற்றிப்படிகள் என்னும் வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது புதிய தலைமுறை.
இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி மகளிர் கல்லூரியுடன் இணைந்து புதிய தலைமுறை வந்தவாசியில் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி தாளாளர் திரு. ரமணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர். திரு. பாஸ்கர பாண்டியன், புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் திரு. கார்த்திகேயன், ஆகியோர் கலந்து கொண்டு +2 தேர்வை எளிதாக கையாண்டு, அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து நம்பிக்கையூட்டி உரையாற்றினர். இதில் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500 கும் மேற்பட்ட பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர். விருந்தினர்களிடம் கேள்விகள் கேட்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர்.