வெற்றிப்படிகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

வெற்றிப்படிகள் நிகழ்ச்சி: ஸ்ரீபெரம்பதூரில் 1000 மாணவர்கள் பங்கேற்பு..!

புதிய தலைமுறை வெற்றிப்படிகள் நிகழ்ச்சி: 1000 மாணவர்கள் கலந்துகொண்டனர்

PT digital Desk

புதிய தலைமுறை சார்பில் ஸ்ரீபெரம்பதூரில் நடத்தப்பட்ட வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை எழுத இருக்கும் மாணாக்கர்கள் எளிதாக எதிர் கொள்ளவும் அதிக மதிப்பெண்களை பெறவும் வகையில் வழிகாட்டும் நிகழ்வாக தமிழ்நாடு முழுவதும் வெற்றிப்படிகள் என்னும் வழிகாட்டும் நிகழ்ச்சியை நடை வருகிறது புதிய தலைமுறை.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்ட வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் 1000- க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி, புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன், IPS அதிகாரி மயில்வாகனன் உள்ளிட்டோர் மாணவர்களிடை யே ஊக்கமளிக்கும் விதமாக உரையாற்றினார்.