தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை எழுத உள்ள மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை எழுத உள்ள மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளவும் அதிக மதிப்பெண்களை பெறவும் ஆலோசனை தரும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் வெற்றிப்படிகள் என்னும் வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது புதிய தலைமுறை.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் TS வசந்தம் மஹாலில் வெற்றிப்படிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீ வித்யா, புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் திரு கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.