clash between cm mk stalin and edappadi k palaniswami in tn assembly PT
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் முதல்வர் - EPS இடையே காரசார விவாதம்.. நடந்தது என்ன?

நீட் விவகாரம் மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே சட்டசபையில் காரசார வாக்குவாதம்.

PT WEB

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

முதலில் நீட் விவகாரம் குறித்து பேசுகையில், "நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான்; நீட்டை ஒழிப்பதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு, “நாங்கள் பொய் வாக்குறுதி கொடுக்கவில்லை; எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்றே சொன்னோம். நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை” என்று முதல்வர் பதில் அளித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விவகாரமும் சட்டசபையில் பூதாகரமாக வெடித்தது. "நீங்கள்தான் 2 மாதத்திற்கு முன்பு கூட ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்று பொய் சொல்லிவிட்டு இப்போது கூட்டணி சேர்ந்துள்ளீர்கள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வினவினார். அதற்கு, "1999ல் பாஜகவோடு திமுக கூட்டணி அமைத்ததற்கு பதில் என்ன? பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தது தவறு இல்லை" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

முழுவிபரங்களை அறிய இந்த காணொளியை பார்க்கவும்..