தமிழ்நாடு

அதிமுகவில் தலையிடவில்லை: வெங்கய்யா நாயுடு

அதிமுகவில் தலையிடவில்லை: வெங்கய்யா நாயுடு

webteam

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு எந்தவொரு அரசியல் கட்சியின் உள் விவகாரத்திலும் ஒருபோதும் தலையிடுவது கிடையாது.இரண்டாவதாக எந்தவொரு மாநில அரசுகளின் செயல்பாடுகளிலும் நாங்கள் தலையிட விரும்பவில்லை. மூன்றாவதாக, அதிமுகவின் பொதுச்செயலாளராக யார் தேர்வு செய்யப்படவேண்டும் என்பது அக்கட்சியின் விவகாரம். அவர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்தார்கள். அதிமுக என்பது அரசியல் கட்சி. அக்கட்சி யாருடைய தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பது அவர்களுடைய முடிவு. அக்கட்சியினரின் விருப்பம். இதில் நாங்கள் ஒருபோதும் தலையிடுவதில்லை என்று கூறினார்.

பணமதிப்பிழப்பின் பலனை, மக்கள் அடையத்தொடங்கி விட்டதாகவும், கறுப்பு பணத்தின் கடைசி ரூபாய் மீட்கப்படும் வரை, கருப்பு பணத்திற்கு எதிரான யுத்தம் தொடரும் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார். புத்தாண்டு தினத்தன்று 3 முன்னணி வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்தன. இதன் பலன் சாதாரண மக்களை சென்றடையும். இதிலிருந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன்கள் மக்களை சென்றடைய தொடங்கி விட்டது என்பது தெளிவாகிறது. கருப்பு பணத்தின் கடைசி ரூபாய் மீட்கப்படும் வரை கருப்பு பணத்திற்கு எதிரான யுத்தம் தொடரும் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார்