அரசுக்கு கோரிக்கை விடுங்கள் ஆனால் எச்சரிக்கை விடுக்காதீர்கள் என வைகோவிற்கு வெங்கையா நாயுடு அறிவுரை கூறினார்.
தமிழகத்தில் இருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர், நேற்று பதவியேற்றுக்கொண்டனர். தி.மு.க கூட்டணியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோவும் இன்று பதவியேற்றுக் கொண்டார். 23 ஆண்டுகளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்த வைகோ இன்று இரண்டாவது நாளாக மாநிலங்களவைக்கு சென்றார்.
அப்போது அவர் பேசுகையில், ஹைட்ரோகார்பனை அனுமதித்தால் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டு எத்தியோப்பியாவாக மாறிவிடும் எனத் தெரிவித்தார். நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலைவனமாக மாறிவிடும் எனவும் ஹைட்ரோகார்பனை அனுமதித்தால் தமிழக மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கிறேன் எனவும் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அதற்கு அரசை எச்சரிக்காதீர்கள் என வெங்கையா நாயுடு வைகோவிற்கு அட்வைஸ் செய்தார். மத்திய அரசுக்கு கோரிக்கை வையுங்கள், கருத்துக்களை கூறுங்கள் என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.