தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பை கண்காணிக்க 200 குழு - அமைச்சர் வேலுமணி

மழைநீர் சேகரிப்பை கண்காணிக்க 200 குழு - அமைச்சர் வேலுமணி

webteam

சென்னை மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், ஆய்வு செய்யவும் 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

மாநகர வார்டு உதவிப்பொறியாளர், சுகாதார ஆய்வாளர் அடங்கிய 5 பேர் கொண்ட 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இந்தக் குழுக்கள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வார்டுகளிலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத ஆயிரம் கட்டடங்களை கண்டறிந்து, அ‌தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த உரிமையாளருக்கு ஆலோசனையும், விழிப்ப‌ணர்வு வழங்கும். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் சுமார் 2லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் ஏதேனும் பழுது, பயன்பாடற்று இருந்தால் அவற்றையும் சரிசெய்ய ஆலோசனைகள் வழங்கப்படும். குழுக்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைமை பொறியாளர் அல்லது கண்காணிப்பு பொறியாளார் ஒருவர் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுவார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.