தமிழ்நாடு

வேலூர்: கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டி... உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

வேலூர்: கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டி... உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

kaleelrahman

கிணற்றில் தவறி விழுந்த நாய்க் குட்டியை, காட்பாடி தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தெரு நாய்க் குட்டி ஒன்று நேற்று அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான புதர் மண்டிய சுமார் 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் புதார்மண்டிய கிணற்றில் இருந்த நாய்க் குட்டியை உயிருடன் மீட்டுடனர். மீண்டு வந்த நாயக்குட்டி தீயணைப்புத் துறையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர்களை சுற்றிச் சுற்றி வந்தது.