செய்தியாளர்: ச.குமரவேல்
பெங்களூருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் (69). இவர் தனது மனைவி சுமதியுடன் ராணிப்பேட்டையில் உள்ள தங்களது உறவினரை சந்தித்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பெங்களூருக்குச் செல்ல ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது காட்பாடி தாராபடவேடு வி.ஏ.ஓ அலுவலகம் அருகில் வேலூரை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சுந்தரவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் துறையினர் இருவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து இறந்த சுத்தரவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.