வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் ஐந்து பேர் உயிரிழ்ந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் ஆக்ஸிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.