தாயும் சேயும் உயிரிழந்த சோகம் PT Web
தமிழ்நாடு

வேலூர்: அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சோகம் - கணவர் புகார்

வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா இரும்பேடு கிரமாத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (26). இவர், ஆவடி பட்டாலியன் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி, கர்ப்பிணியான இவரது மனைவி அனிதா (24) பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

Child death

இந்நிலையில், இன்று காலை அனிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதில், குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடுத்த ஒருமணி நேரத்தில் தாய் அனிதாவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என அனிதாவின் கணவர் கோடீஸ்வரன் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.