தமிழ்நாடு

வேலூர் மக்களவை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

வேலூர் மக்களவை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

webteam

வேலூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‌வேலூர் மக்களவை தொகுதியில், காலை ‌‌7 ம‌ணி‌‌ ‌முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வேலூர் தொகுதியில் 1553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1998 விவிபாட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தலையொட்டி வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் மேற்பார்வையில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், விவிபாட் எந்திரங்களும் அனுப்பப்பட்டுள்ளன. 

பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 133 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரும், கூடுதல் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களார்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்ட ஆட்சியரும் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்கள் ‌அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. வரும் 9ஆம் தேதி வாக்கு‌ எண்ணிக்கை நடைபெற உள்ளது.