தமிழ்நாடு

மறுவாழ்வு மையத்தில் கம்பால் அடித்து கொடுமை

மறுவாழ்வு மையத்தில் கம்பால் அடித்து கொடுமை

webteam

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி மனித உரிமை மீறல் நடந்திருப்பது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குடியாத்தம் காந்தி நகரில் குடிக்கு அடிமையானவர்களை மீட்பதாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குகன் என்பவர் கண்ணொலி அமைப்பு என்ற பெயரில் மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை 90 நாட்களில் அப்பழக்கத்தில் இருந்து திருத்தி நல்வழிபடுத்துவதாக விளம்பரம் செய்து, அதற்காக 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.‌

இந்த நிலையில் அந்த மையத்தில் சேர்க்கப்படுபவர்கள் மீது அதிக அளவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், மிகவும் கொடுமையான முறையில் அடித்து துன்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து புதிய தலைமுறை கள ஆய்வு செய்த போது அவர்கள் அளித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இரவு நேரங்களில் நிர்வாணப்படுத்தி, கம்பால் அடித்ததாகவும், கை, கால்களைக் கட்டி வாயில் துணியை அடைத்து பாதங்களில் அடித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். மையத்தில் வளர்க்கப்படும் நாயை விட்டு தங்கள் மீது சிறுநீர் கழிக்க வைப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மன வேதனையுடன் கூறினர். பாலியல் கொடுமைகள் செய்து துன்புறுத்துவதாகவும், ஆபாச வார்த்தைகள் கூறி பெல்ட் மற்றும் கட்டைகளால் அடிப்பதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.