தமிழ்நாடு

வேலூர்: ஆரவாரத்துடன் அமர்க்களமாக நடைபெற்ற எருதுவிடும் விழா

kaleelrahman

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு வாழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 82 கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் முதல் நாளான இன்று அணைகட்டில் எருதுவிடும் விழா நடைபெற்றது.

இதில், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த காலஅளவில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை ஓடி கடக்கும் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அணைகட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் முதல்பரிசாக ஒரு லட்சத்தி 5 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

எருது விடும் விழாவில் கலந்து கொண்ட காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள,; கொரோனா எக்ஸ்பிரஸ், நான் உன்னை காதலிக்கிறேன், மங்காத்தா, வர்தா புயல், தமிழ்நாடு போலீஸ், பில்லா, போலேரோ போன்ற வித்தியாசமான பெயர்கள் சூட்டியிருந்தனர். பந்தைய தூரத்தை 8.6 வினாடிகளில் கடந்த சங்கீதா என்ற காளை முதல் பரிசை தட்டிச்சென்றது.

மேலும் எருதுவிடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். மேலும் பலத்த காவல்துறை பாதுகாப்பும், மாட்டு உரிமையாளர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.