செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப் நிலைதடுமாறி சாலையில் இருந்த பேரிகார்டில் மோதியுள்ளது. இதையடுத்து சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஜீப்பில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், சென்னையை சேர்ந்த ஒருவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கியவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.