தமிழ்நாடு

“24 மணிநேர கடைதிறப்பு கார்பரேட்டுக்கே உதவும்” - த. வெள்ளையன்

rajakannan

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வணிகர் சங்கங்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதிக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. 

தமிழகத்தில் 24 மணி நேரம் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் வரவேற்பும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நன்றியும் அவர் தெரிவித்தார். 

ஆனால், 24 மணிநேரமும் கடைகளை திறக்கலாம் என்ற அரசின் அரசாணைக்கு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், தமிழக அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது என்றும், இதனால் சிறுகுறு வணிகர்களுக்கு எவ்வித பயனும் கிடையாது என்றும் கூறியுள்ளார். மாறாக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே நன்மை கிடைக்கும் என்றும் வெள்ளையன் விமர்சித்துள்ளார்.