தமிழ்நாடு

காலையில் வாட்டி வதைத்த வெயில் மதியம் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை

kaleelrahman

பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கொட்டி தீர்த்த கன மழை காரணமாக  குளிர்ச்சியான சூழல் நிலவியது.

பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனையடுத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, நசரத்பேட்டை, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது, ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், சென்னை அம்பத்தூர், பாடி, கொரட்டூரிலும் திடீரென பெய்த மழையால் கடைகள் மற்றும் வெளியே வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்குச் சென்றனர். திடீரென பெய்த கனமழை காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.