Andhra rain pt desk
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை டூ ஆந்திரா செல்லும் வாகனங்கள் சூலூர்பேட்டை அருகே தடுத்து நிறுத்தம்

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் வாகனங்கள் சூலூர்பேட்டை அருகே தடுத்து நிறுத்தப்பட்டன.

webteam

மிக்ஜாம் புயல் இன்று நெல்லூர் - மசூலிப்பட்டணம் அருகே கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து நெல்லூர் வழித்தடத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சூலூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள காலங்கி நதி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு ஆறு போல் தண்ணீர் ஓடுகிறது.

Andhra rain

இதன் காரணமாக நெல்லூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்லவும் அல்லது பயணத்தை ஒத்திவைக்கவும் காவல் துறையினர்அறிவுறுத்தியுள்ளனர். இதேபோன்று, புயல் காரணமாக நெல்லூர், மசூலிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.