soap, shampoo ஏஐ
தமிழ்நாடு

சோப்பு, பற்பசைக்கு சைவ, அசைவக் குறியீடு.. மத்திய அரசு அதிரடி திருத்தம்!

சோப்பு, ஷாம்பு, பற்பசையில் சைவ, அசைவக் குறியீடு இடம்பெறும் வகையில் பேக்கேஜிங் விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவருகிறது.

Rishan Vengai

உணவுப் பொருட்களைப் போல சோப்பு, ஷாம்பு, பற்பசை போன்ற அன்றாடப் பயன்பாட்டு பொருட்களிலும் சைவம், அசைவம் குறியீடு கட்டாயம் என மத்திய அரசு சட்ட அளவியல் விதிகள் 2011ஐ திருத்தி உடனடி அமலுக்கு கொண்டு வந்துள்ளது. விலங்குக் கொழுப்பு உள்ள பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு புள்ளி, இல்லாதவற்றுக்கு பச்சை புள்ளி அச்சிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களைப் போலவே, சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களிலும் 'சைவம் அல்லது அசைவம்' என்பதற்கான குறியீடுகளைப் பதிக்கும் வகையில் பேக்கேஜிங் விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டதை அசைவம் என்று குறிக்கும் வகையில் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளியும் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்படாத பொருட்களில் பச்சை நிறப் புள்ளியும், அச்சிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக சட்ட அளவியல் விதிகள் 2011இல் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.