தமிழ்நாடு

திருமழிசையில் மே 10-ஆம் தேதிக்குப் பிறகே காய்கறி சந்தை: வியாபாரிகள் கூட்டமைப்பு

திருமழிசையில் மே 10-ஆம் தேதிக்குப் பிறகே காய்கறி சந்தை: வியாபாரிகள் கூட்டமைப்பு

PT

திருமழிசையில் மே 10-ஆம் தேதிக்குப் பிறகே காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு, திருமழிசை பகுதிக்கு மாற்றப்படுகிறது. இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 27 வியாரிகள் கூட்டமைப்பு சார்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன், புதிதாக சந்தை செயல்பட இருக்கும் திருமழிசை பகுதியில் வியாபாரிகள் ஆய்வு செய்ய இருப்பதாகவும்,அதைத் தொடர்ந்து 8-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னரே புதிய இடம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். 5 மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகள் வராததால், சென்னையில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.