வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
தமிழ்நாடு

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி: 300 மாணவர்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தினர்..!

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி: மாணவர்களின் அறிவியல் சாதனைகள்

PT digital Desk

புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி மற்றும் அரியலூர் மாவ‌ட்ட‌ம் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை  25.07.2025 அன்று  நடத்தியது.

முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆ.பாலசுப்பிரமணியன், முனைவர்  பாலகிருஷ்ணன் ராமநாதன், வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் மற்றும்  பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி இரா.கீதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகள் என 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

சீனியர் பிரிவில் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள்  ஞானசேகரன் மற்றும் தமிழ்  முதல் பரிசையும் மற்றும் மான்ட்ஃபோர்ட் மேட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி  மாணவர்கள் ப்ரேதேஷ்ராஜ் மற்றும் ராகுல் இரண்டாவது பரிசையும், ஃபாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ரவிவர்மன் மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றனர்.

ஜூனியர் பிரிவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் குழலி மற்றும் சத்பிகா ஸ்ரீ முதல் பரிசையும், ஜெயன்கொண்டதை  சேர்ந்த சௌடாம்பிகா வித்தியாலயா மாணவிகள் ஷாமினி மற்றும் தான்யா இரண்டாவது பரிசையும், மான்ட்ஃபோர்ட் மேட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி மாணவிகள் பார்கவி  மற்றும் ஸ்ரீவர்ஷினி மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி இரா.கீதா ஆகியோர் பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டியில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தவிர போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.