தமிழ்நாடு

வீரப்பன் மனைவியின் புதிய அமைப்பு: "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"

வீரப்பன் மனைவியின் புதிய அமைப்பு: "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"

rajakannan

"மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு" என்ற இயக்கத்தை வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தொடங்கியுள்ளார். 

கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் குழுவினரை அப்போதைய தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், வீரப்பனின் 66-வது பிறந்தநாளை அவரது மனைவி முத்துலட்சுமி சேலத்தில் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், “மண் காக்கும் வீரத்தமிழர்” என்ற அமைப்பை முத்துலட்சுமி துவக்கியுள்ளார். 

இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய முத்துலட்சுமி, வீரப்பன் இருந்த வரை தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதாக கூறினார். மேலும், வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கர்நாடகா மேகதாது அணையைக் கட்ட முடியாமா என்று கேள்வி எழுப்பினார்.