வீரப்பன் சகோதரர் மாதையன் விடுதலை கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் விடுதலை கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 23 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மாதையன் செய்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
சிறையிலிருக்கும் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே மாதையன் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.