தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் 'சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொன்று நாள் இன்று.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் தனி ராஜ்ஜியம் நடத்திய வீரப்பன் 2004-ம் ஆண்டு அக்டோபர் அக்டோபர் 18 அன்றுதான் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 1952-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி பிறந்தார்.1972-ம் ஆண்டு சந்தன மரக் கடத்தலுக்காக முதன் முதலில் வீரப்பன் கைது செய்யப்படுகிறார். தமிழக போலீஸ் அதிகாரி சிதம்பரம் என்ற வனத்துறை அதிகாரியை கொலை செய்த சம்பவத்தால் வீரப்பனை நாடறிந்த நபராக அறியப்பட்டார். அதேபோல் 1991-ல் சீனிவாஸ், ஹரிகிருஷ்ணா என அடுத்தடுத்த வனத்துறை அதிகாரிகள் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர்.இதன் பின்னர் வீரப்பனை கைது செய்ய தனி அதிரடிப்படையை அமைத்தது தமிழக அரசு. கர்நாடகா அரசும் தனியே ஒரு அதிரடிப்படையை உருவாக்கியது.இரு மாநில அதிரடிப்படைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தேடுதல் வேட்டையை நடத்தின. இந்த தேடுதல் வேட்டையில் மலைவாழ் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். வாச்சத்தி பலாத்கார சம்பவமும் இந்தக் காவல் படையினரால் நிகழ்ந்ததுதான்.
இதையடுத்து கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினார். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்தக்கடத்தல் சம்பவம்.108 நாட்கள் ராஜ்குமாரை பிணைக் கைதியாக அவர் பிடித்து வைத்திருந்தார். பழ. நெடுமாறன் தலைமையிலான குழு மூலம் ராஜ்குமாரை மீட்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமது சில கோரிக்கைகள் நிறைவேறிய நிலையில் ராஜ்குமாரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார் வீரப்பன். அதன் பின் அதிரடிப் படையின் வியூகம் அதிரடியாக அமைந்தது. ஒற்றர்கள் மூலம் அவரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர். அவரை மருத்துவ சிக்கிச்சைக்காக வெளியே வைத்து இரவோடு இரவாக சுட்டுக் கொன்றது விஜய் குமார் தலைமையிலான தமிழக அதிரடிப் படை.