தமிழ்நாடு

முழுக் கொள்ளளவை நெருங்குகிறது வீராணம் ஏரி 

முழுக் கொள்ளளவை நெருங்குகிறது வீராணம் ஏரி 

webteam

தொடர்‌மழை மற்‌றும் மேட்டூர் கீழணையிலிருந்து வரும் நீர்வ‌ரத்து காரணமாக வீராணம் ஏரி மீண்டும் முழுக்கொள்ளளவை நெருங்கி வருகின்றது.

வீராணம் ஏரியின் முழுகொள்ளளவான 47.50 அடியில் தற்போது 46.80 அடி அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. தற்போது ஏரிக்கு மழை நீருடன், கீழணைய‌லிருந்து வடவாறு வழியாக வி‌நாடிக்கு ஆயிரத்து 60 கன ஆடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 

ஏரி முழுகொள்ளளவை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை‌யின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 58 கன அடியும், சேத்தியார்தோப்பு அணைக்கட்டுக்கு புதிய மதகு வழியாக விநாடிக்கு 527 கனஅடியும், பாசனத்திற்காக விநாடிக்கு 42 கன அடியும் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.