தமிழ்நாடு

உதவி ஐஜி எழுதிய வீர வணக்க நாள் பாடல்... வெளியிட்ட டிஜிபி திரிபாதி

kaleelrahman

ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியான திருநாவுக்கரசு எழுதிய வீர வணக்க நாள் பாடல் வீடியோவை காவல்துறை டிஜிபி திரிபாதி வெளியிட்டார். 


பணியின் போது உயிர்நீத்த காவல் அதிகாரிகளின் நினைவு நாள் நேற்று இந்தியா முழுவதும் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த 151 காவல் ஆளுநர்களின் உருவம் பொறித்த கல்வெட்டுக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து டிஜிபி திரிபாதி உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் தியாகிகளின் நினைவுச் சின்னத்துக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில் வீர வணக்க நாளையொட்டி தமிழக சட்டம் - ஒழுங்கு உதவி ஐஜி திருநாவுக்கரசு பாடல் இயற்றி அதனை பாடி வெளியிட்டுள்ளார். அதன் வெளியீட்டு விழா டிஜிபி திரிபாதி முன்னிலையில் நடைபெற்றது. தன்னுயிர் தந்து தேசம் காத்த என தொடங்கும் அந்த பாடலில், ‘‘தேசம் காத்திட்ட வீரமே, நேசம் வளர்த்திட்ட வீரமே, ஈடில்லாத மனிதமே, அற்புதமான புனிதமே’’ என்ற வரிகள் கேட்போரின் மனதில் அமைதியை உண்டாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. யூடியூப் இணையதளத்தில் திருநாவுக்கரசுவின் இந்த பாடல் வரிகள் வைரலாக பரவி வருகிறது.


இப்பாடலுக்கு ரித்தேஷ் இசையமைக்க, ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு, யஷ்வந்த்குமார், ஹேம மீனாட்சி மற்றும் மணிகண்டன் ஆகியோர் பாடியுள்ளனர்.