தமிழ்நாடு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு

webteam

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இங்கு, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 16 வகையான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இந்த சாரணாலயம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூனில் மூடப்பட்டு, அக்டோபர் அல்லது நவம்பரில் திறக்கப்படும். இதனையடுத்து இன்று பறவைகள் சரணாலயம் காலை திறக்கப்பட்டது. தினமும் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.