தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தவெக தலைவர் விஜய், எலைட் அரசியல் செய்வதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ஆளுநரை சந்தித்து முறையிடுவதை அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து டெல்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம் என்றும், இப்போது தவெக தலைவர் விஜயை வைத்து அரசியல் செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவியை விஜய் 15 நிமிடங்கள் சந்தித்தார், ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார் என குறிப்பிட்ட வன்னி அரசு, ஊடகத்திற்கு பேட்டி கொடுக்காமலேயே விஜய் சென்றதற்கு பெயர்தான் எலைட் அரசியல் என விமர்சனம் செய்துள்ளார்.