சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள எம்பி ரவிக்குமார், மஞ்சள் நீராட்டு விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தமக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சள் நீராட்டு விழா நிகழ்வுகள் எவ்வளவு பிற்போக்குத்தனமானவை என்பதை புரியவைக்க வேண்டும் என்றும், மஞ்சள் நீராட்டு விழா போன்ற விழாக்களுக்கு எதிராக கட்டாயம் நாம் கருத்தியல் ரீதியாகப் போராடவேண்டும் எனவும் நீதிநாயகம் சந்துரு வலியுறுத்தியதாக எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் நீராட்டு விழா குழந்தைகளுக்கே நல்லதல்ல என்றும், ஊரைக்கூட்டி அறிவிப்பது மடத்தனம் எனவும் சந்துருவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார். அரசியல் தளத்தில் வலதுசாரி போக்கை எதிர்த்துக்கொண்டு, பண்பாட்டு தளத்தில் அதனை ஊக்குவிப்பதால், இறுதியில் அரசியல் தளத்திலும் வலதுசாரி போக்கு வலுப்பெறக்கூடும் எனவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.