ஜோஷிகா, தொல்.திருமா புதிய தலைமுறை
தமிழ்நாடு

"நீ எப்படி இவ்ளோ அழகா இருக்க.." - குழந்தையின் பதிலை கேட்டு வாய்விட்டு சிரித்த திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், குழந்தை ஒன்று சொன்ன பதிலைக் கேட்டு வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தார்.

PT WEB

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம் கீழகண்ணாத்தூரைச் சேர்ந்தவர் கார்ல் மார்க்ஸ். தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுடைய இரண்டாவது குழந்தைக்குப் பெயர் வைப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, அவரது கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்தனர்.

அப்போது, அவருடைய மூத்த குழந்தையான ஜோஷிகாவிடம், திருமாவளவன் சில கேள்விகளைக் கேட்கிறார். அந்தக் கேள்விகளுக்கு மழலை மொழியில் ஜோஷிகா சொல்லும் பதில்களைக் கேட்டு திருமாவளவன் வியந்துபோய் சிரிக்கிறார். அதில், “நீ எப்படி இவ்ளோ அழகா இருக்க” எனக் கேட்க, அதற்கு அந்தக் குழந்தை, “நான் மேக்கப் பண்ணினேன்” என்று சொல்ல, அதற்கு திருமாவளவன் வாய்விட்டு சிரிக்கிறார். அத்துடன் அந்த குழந்தைக்கு அன்பு முத்தத்தையும் பரிசாகத் தருகிறார். அந்தக் குழந்தையிடம் திருமாவளவன் கொஞ்சி மகிழும் வீடியோவை, அவர் கேட்கும் கேள்விகளுக்கு அந்தக் குழந்தை பதில் சொல்வதையும் இங்கு காணலாம்.