தமிழக பழனிபாபா கழகம் சார்பில் சென்னை புளியந்தோப்பில் பழனிபாபாவின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பழனி பாபா குறித்து அனைத்து தரப்பு இளம் தலைமுறையினரும் நன்கு அறிவார்கள். சமூக ஊடகங்களில் அவரது பேச்சுக்கள் அதிகமாக உள்ளது. 90-களின் தொடக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை தொடங்கிய காலத்தில் பழனிபாபாவை பொதுக்கூட்டத்தில் பேச வைக்க ஏற்பாடு செய்தேன். சிறுத்தைகள் கூட்டத்தில் சிங்கத்தின் கர்ஜனை என்ற தலைப்பிட்டு துண்டு பிரசுரம் வெளியிட்டோம்.
ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேச முடியவில்லை. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபொழுது அவரை விமர்ச்சித்து பேசியவர் பழனிபாபா. அரசியல் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவர். அவர் பேசுவதில் தர்க்க நியாயம் இருக்கும். அவரிடம் மதவெறி உணர்வோ இன வெறி உணர்வோ மேலோங்கியது இல்லை. அவர் கொள்கை பார்வை கொண்டவர் தொலைநோக்கு பார்வை கொண்டவராக இருந்தார்.
இறக்கும் முன்பாக கடைசி காலத்தில் பேசி கருத்துக்கள் தற்போது பரவுகிறது. அப்படி என்ன சொன்னார் என்றால்.. இஸ்லாமியராக இருந்தும் இஸ்லாமியருக்கு மட்டும் பேசாமல் அனைவரும் பேசியவர். பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்காத யாரையும் நம்பாதே என்று அப்போதே சொன்னவர் பழனிபாபா. அவர் மதம் சார்ந்த தமிழர்களை அடையாளப்படுத்தவில்லை. தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்க்க தரிசனமாக கூறி இருக்கின்றார்.
பெரியார் குறித்து பின்னாளில் விமர்ச்சிப்பான் என்பதை முன்னே புரிந்தவர். அவர் திமுக அதிமுக திராவிடர் கழகம் என்று இவற்றை எல்லாம் சேர்ந்தவர் இல்லை. அப்படி சொல்ல காரணம் அவர் பார்ப்பனியத்தை புரிந்தவர். அவர் பெரியாரையுய் அம்பேத்கரையும் புரிந்தவர், உள்வாங்கியவர் என்பதால்தான் அப்படி கூறினார்.
அவர் இஸ்லாமிய தலைவர்களை அடையாளம் காட்டவில்லை. உழைக்கும் மக்களின் மீது ஈர்ப்பு இருப்பதால் தான் பாமக கட்சியுடன் பயணித்து இருக்கிறார். வடலூரில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் மேடையில் பேசியுள்ளார். அந்த மேடையில் நானும் பேசியுள்ளேன். பழனிபாபா உரை என்பது யார் கேட்டாலும் மயங்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும். பேச்சிலே காந்தம் உண்டு. பேச்சி இனிமை உண்டு. அவ்வளவு தெளிவாக கருத்தியல் சார்ந்த பேச்சாக இருக்கும். அதனால் தான் உள் உணர்ந்து சொல்கிறார்.
இன்று பெரியாரை பற்றிய விமர்சனங்கள் கடுமையாக கொச்சாமாக வைக்கிறார்கள். அவரே கூறி இருக்கின்றார். பகுத்தறிவு பூர்வமாக சிந்தி என்று கூறினார். நான் சொல்கிறேன் என்று ஏற்காதே. விமர்சனம் என்ற பெயரால் அவதூறுகளை பரப்பு கிறார்கள். கொச்சை படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சாதிய வன்மத்துக்கு எதிராக பேசி இருக்கிறார்கள்.
சனாதன தர்மத்தை விடவா இந்த மண்ணில் பெரியார் அரசியல் ஆபத்தானது. வேங்கை வயல் குறித்து பேசி இருக்கிறார்களா. மாட்டு வணிகம் செய்த இஸ்லாமியர்கள் தேடி தேடி அடித்து கொலை செய்தார்கள். அவர்களை கண்டிக்கும் திராணி இருக்கிறாதா.. இடித்துவிட்டு கோயில் கட்டி இருக்கிறார்களே.. அதை கண்டித்து இருக்கிறார்களே.. அந்த அநீதியை நான் எதிர்த்து விமர்சித்தேன். பணமதிப்பு இழப்பு கொண்டு வந்தபோது எதிர்த்தேன். சிஏஏ சட்டம் வந்தபோது நான் எதிர்த்தேன். இப்படிப்பட்டவர்கள் விமர்சனங்காமல் பெரியாரை விமர்சிக்கிறார்கள்..
பெரியரை விமர்சிக்கும் ஆர்எஸ்எஸ் கும்பல் அரசியல். பெரியாரை இறந்துவிட்டார் என நினைத்தார்கள். ஆனால் பெரியார் பின்னால் அண்ணா வந்தார். அப்புறம் கருணாநிதி வந்தார். அப்படி தொடர்ந்து வந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தான் சோ ராமசாமி, பின்னர் குருமூர்த்தி என்று வந்துள்ளனர்.
பெரியாரை விமர்சிப்பவர்களை குறித்து அச்சம் இருக்கிறது. பழனி பாபா சிந்திக்கும் கோணம் புதிதாக இருக்கும். ராமதாஸ் அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு அவரையே விமர்சிக்கும் துணிச்சல் கொண்டவர் பழனிபாபா. அதேபோல், என்னை கூட பழனிபாபா விமர்சித்து பேசி இருக்கிறார். அப்படி மேடையிலே பேசும் துணிச்சல் பழனிபாபாவுக்கு மட்டும் உண்டு. எந்த மதத்ததுக்கு எதிராக விமர்சித்தது இல்லை.
பெரியாரை தமிழை காட்டு மிராண்டி மொழி என்று பேசினார் என்றால் அவர் தமிழை இழி படுத்தவில்லை. தமிழில் உள்ள புராணங்கள் உள்ளன. அதைத்தான் எதிர்த்தார். ராமாயணம் பாசுரம் போன்றவை உள்ளன. அதனை பகுத்தறிவை ஏற்பதில்லை. அதனால் தான் புதிய மொழியை கற்றுக் விஞ்ஞான கருத்துகளை படியுங்கள் என்று தான் கூறினார். காட்டி மிராண்டி காலத்தில் எழுதிய புராணங்கள் உள்ளன. அதனால் தமிழை திட்டினார். பெற்ற பிள்ளையை தாய் திட்டுவது போல தான் தமிழை விமர்சனத்து பேசினார். அது தவறா..? எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் பெரியார். 247 எழுத்துக்கள் தேவையில்லை என்று கூறியவர். எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறை படுத்தியவர் எம்ஜிஆர். அப்படிப்பட்ட பெரியாரை புரிந்து கொண்டவர் பழனிபாபா” என்றார்.