தமிழ்நாடு

கூட்டணி சர்ச்சை: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்

கூட்டணி சர்ச்சை: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்

webteam

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார்.

’திமுகவுடன் தற்போது இருப்பவர்கள் அனைவரும் நண்பர்கள் தான் என்றும், கூட்டணி கட்சிகள் அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இல்லை’ என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். இது  சர்ச்சையை கிளப்பியது. ’திமுக கூட்டணியில் மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் இருக்கிறதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கூறியிருந்தார்.

துரைமுருகன் பேச்சுக் குறித்து கருத்துத் தெரிவித்த திருமாவளவன், திமுக உடனான உறவு தொடர்வதாகவும் இது கூட்டணியாக மாற விரும் புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

அவர்கள் சந்திப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் மூலம் கூட்டணி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.