தமிழ்நாடு

சிதம்பரத்தில் திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி - விடுதலை சிறுத்தை அறிவிப்பு

சிதம்பரத்தில் திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி - விடுதலை சிறுத்தை அறிவிப்பு

webteam

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக நேற்று முந்தினம் அறிவித்தது. அதன்படி, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். 

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரத்தில்  அக்கட்சியின் பொதுச்செயளாளர் ரவிக்குமார், சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அவர் அறிவித்தார். இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், விழுப்புரத்தில் போட்டியிடவுள்ள ரவிகுமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக 20, காங்கிரஸ் 10, விடுதலை சிறுத்தைகள் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1, ஐஜேகே ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.