தமிழ்நாடு

சென்னையில் கணினிமயமாக்கல் துறை கண்காணிப்பாளராக பதவியேற்றார் வருண்குமார் ஐபிஎஸ்

சென்னையில் கணினிமயமாக்கல் துறை கண்காணிப்பாளராக பதவியேற்றார் வருண்குமார் ஐபிஎஸ்

webteam

சென்னையில் ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் துறையின் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐபிஎஸ் பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த 31ம் தேதி ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் எனும் 24 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு மதவாதக் காரணம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வருண் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்னை எதுவுமில்லை.

வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவிற்கு மறுநாளே வருண்குமார் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் சென்னையில் ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் துறையின் கண்காணிப்பாளராக அவர் மாற்றப்பட்டார். அதன்படி ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் துறையின் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐபிஎஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.