தமிழ்நாடு

மழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

மழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

webteam

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் தாலுக்காவிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.