தமிழ்நாடு

வேன் மோதி விஏஓ உயிரிழப்பு - கண்காணிப்பு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்

வேன் மோதி விஏஓ உயிரிழப்பு - கண்காணிப்பு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்

webteam

திருச்சி மன்னார்புரம் அருகே சிறுகமணி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் குமார் நேற்றிரவு பணிமுடிந்து வீடு திரும்பும் போது வேன் மோதியதில் உயிரிழந்தார்.

கடந்த 9-ம் தேதி விமானம் மூலம் திருச்சி வந்தவர்கள் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் திருச்சி மன்னார்புரம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் . இழப்பீடாக 50 லட்சம் ரூபாயும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.