தமிழ்நாடு

வாணியம்பாடி: தனியார் வேட்டி சேலை வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி!

webteam

வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவசமாக வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் சமூக ஆர்வலர் ஐயப்பன் என்பவர் தைபூசத் திருவிழாவிற்காக வருடந்தோறும் இலவசமாக வேட்டி சேலை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த வருடமும் இலவச வேட்டி சேலை வழங்க டோக்கன் வழங்கியபோது அதிக அளவு பெண்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 4 பெண்கள் உயிரிழந்த நிலையில், வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்களை, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.