செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் இன்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது, இந்த எருதுவிடும், விழாவில், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரமாநிலம் குப்பம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்நிலையில், இந்த எருது விடும் விழாவை வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து குறிப்பிட்ட இலக்கை குறைந்த மணித்துளிகளில் கடந்த காளைகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக இருசக்கர வாகனங்களும் 4 ஆவது பரிசாக 33 ஆயிரம் என மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டது,
இந்த விழாவை காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். முதல் 3 பரிசுகளை தட்டிச் செல்லும் காளைகள் எது என்பதை அறிய ஏராளமான பொதுமக்கள் ஆவலோடு காத்துள்ளனர்.