தமிழ்நாடு

ஓடும் ரயிலை தடுத்து நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் - தாமதமான ரயில் சேவை

webteam

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சென்னை நோக்கிச் சென்ற வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயிலை தடுத்து நிறுத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் வாணியம்பாடி ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் 20 கிலோ மீட்டர் வந்து ரயிலை, இளைஞர் ஒருவர் தண்டவாளத்தின் நடுவில் நின்று நிறுத்தி முயன்றுள்ளார்.

இதைப்பார்த்த ரயில் ஓட்டுநர் பலத்த சத்தத்துடன் ஒலி எழுப்பியும் அந்த இளைஞர் தண்டவாளத்தை விட்டு செல்லாததால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரை தண்டாவளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால், சுமார் 10 நிமிட கால தாமத்திற்குப் பிறகு விரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சென்றது.

இந்நிலையில், தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே பாதுகாப்பு படையின் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த இளைஞர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது, இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் அந்த இளைஞரை வாணியம்பாடி பகுதியில் உள்ள சரணாலயம் கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.